சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடம்பன் படத்தை அடுத்து அமீர் இயக்கும் சந்தனத்தேவன் படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இந்த படத்தில் அவரது தம்பி சத்யாவும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். 1980களில் நடக்கும் பீரியட் கதையில் இப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தையடுத்து சுந்தர்.சியின் சங்கமித்ரா படத்தில் நடிக்க தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் ஆர்யா. அப்படத்தில் ஜெயம் ரவியும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார்.
இந்த நிலையில், நான், அமரகாவியம், எமன் படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடிக்கிறார் ஆர்யா. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார் ஆர்யா. அதேபோல், அதே ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் ஜீவா. அப்படி இதற்கு முன்பு நட்புக்காக மட்டுமே இணைந்து நடித்துள்ள ஆர்யா-ஜீவா ஆகிய இருவரும் ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்தில் இரண்டு ஹீரோ கதையில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.