இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏற்கெனவே டான்சிங் கில்லாடிகள், டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற இரு நடன நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜீ டான்ஸ் லீக் என்ற புதிய நிகழ்ச்சியையும் நடத்த இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் புதுமை என்னவென்றால் இதில் பஙகேற்று நடனமாடுகிறவர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிப்பவர்கள், தொகுப்பாளர்கள், ரியாலிட்டி ஷோக்களை நடத்துகிறவர்கள். அதாவது ஜீ குடும்ப நிகழ்ச்சி. பூவே பூச்சூடவா, தலையணை பூக்கள், றெக்க கட்டி பறக்குது மனசு, ஜூனியர் சீனியர், அதிர்ஷ்லட்சுமி, மெல்ல திறந்தது கதவு, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடிப்பவர்கள் தனித்தனி அணி அமைத்து ஆட்டத்தில் கலக்க இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் சினேகா, அம்பிகா, காயத்ரி ரகுராம், ஆகியோர் நடுவர்களாக பணியாற்றுகிறார்கள். தீபக் தொகுத்து வழங்குகிறார். நாளை முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆரம்பமாகிறது. சனிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.