சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சிம்பு நடிக்கும் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியானால் சந்தேகமில்லாமல் அது சாதனை தான். அப்படியொரு சாதனையை ஏஏஏ படம் படைக்குமா என்பது தான் தற்போதைய கேள்வி. சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். ஸ்ரேயா, தமன்னா இருவரும் கதாநாயகியாக நடித்துள்ளனர். ஜூன் 23ஆம் தேதி ரிலீஸை உறுதிசெய்துவிட்டார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
இதற்கிடையில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கு நேற்று நடைபெற்ற தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஏஏஏ படம் ரிலீஸாவது உறுதி என்கின்றனர்.
அதே தேதியில் வெளியாகும் ஜெயம் ரவியின் 'வனமகன்' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. எனவே ஏஏஏ படத்தைவிட வனமகன் படத்துக்கே அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.