சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டு, "இது தாண்டா போலீஸ்", போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர் ராஜசேகர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஏராளமான வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தவர் ஷிவானி, இளையவர் ஷிவாத்மிகா. இவர்களில் டாக்டர் படித்து வரும் ஷிவானி, அப்பா - அம்மாவை போல் சினிமாவில் களம் இறங்க உள்ளார். இவர் நடிக்கும் முதல்படம் தமிழில் உருவாக உள்ளது.
சினிமாவில் நடிப்பது பற்றி ஷிவானி கூறியிருப்பதாவது... "அப்பா-அம்மா இருவரும் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் சின்ன வயதில் இருந்தே தெரியும். பரதநாட்டியம், குச்சிபிடி போன்ற நடன வகுப்புகளுக்கு சென்று வருகிறேன். இசையிலும் எனக்கு ஆர்வம் உண்டு. கீ போர்ட், கிடார், வீணை ஆகியவற்றை நன்றாக வாசிப்பேன். நானும் தங்கை ஷிவாத்மிகாவும் கிக் பாக்சிங் படித்து வருகிறோம். நான் பொறந்தது மட்டும் தான் தமிழ்நாடு, வளர்ந்தது எல்லாம் ஐதராபாத்தில் தான். உறவினர்கள் நிறையபேர் சென்னையில் இருக்கிறார்கள், அவர்களுடன் தமிழில் தான் பேசுவேன். நான் இப்போது மருத்துவம் 3வது வருடம் படித்து வருகிறேன். நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன். தனுஷ், விஷால், விஜய்சேதுபதி போன்றவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். தனுஷின் 3 படத்தை பார்த்து அழுதிருக்கிறேன். இருந்தாலும் என்னுடைய ஆள் டைம் ஹீரோ அப்பா தான். முதலில் டாக்டர் ஆகிவிட்டு, அப்புறம் ஆக்டர் ஆகிவிடுவோம்" என்கிறார் ஷிவானி.