அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
எந்திரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் 2.0. ரஜினியுடன் ஹிந்தி நடிகர் அக்ஷ்ய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க சுமார் 400 கோடி ரூபாய் செலவில் 2.0 தயாராகி வருகிறது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என சுமார் 15 மொழிகளில் படத்தை டப்பிங் செய்ய உள்ளார்கள்.
பொதுவாக ஷங்கர் படங்கள் என்றாலே கெடுபிடிகள் அதிகமாக இருக்கும். அவர் படம் சம்பந்தப்பட்ட போட்டோக்கள், கதைகள் எதுவுமே வெளியாகாது. ஆனால் 2.0-வில் மாறுதலாக அக்ஷ்ய் சம்பந்தப்பட்ட போட்டோக்கள் லீக்காகின. இதையடுத்து ஷங்கர் பாதுகாப்பு கெடுபிடிகளை இன்னும் அதிகமாக்கினார். ஆனாலும் தற்போது 2.0 படத்தின் போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. ரோபோ உடையில் ரஜினியும், எமியும் உள்ளனர். இதில் எமி ஒரு பஸ்ஸை இயக்க, ரஜினி அதை தள்ளுவது போன்று அந்த போட்டோக்கள் உள்ளன. இவ்வளவு கெடுபிடிகளையும் தாண்டி போட்டோக்கள் எப்படி கசிந்தன என படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது.