சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வரவேண்டும், அவருக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன், என பா.ஜ., - எம்.பி.,யும், நடிகருமான, சத்ருகன் சின்ஹா அழைப்பு விடுத்துள்ளார்.
யோசனை : நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவாரா, தனிக்கட்சி துவங்குவாரா, பா.ஜ.,வில் சேருவாரா என்பதுதான் தமிழகத்தில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பீஹார் மாநில பா.ஜ., அதிருப்தி எம்.பி.,யும், நடிகருமான சத்ருகன் சின்ஹா, ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார். பா.ஜ., தலைமை மீது அதிருப்தியில் உள்ள சத்ருகன் சின்ஹா, எந்த கட்சியிலும் சேர வேண்டாம் என, ரஜினிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது சரியான நேரம்
இதுபற்றி சத்ருகன் சின்ஹா கூறியிருப்பதாவது: பாசத்துக்குரிய ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபட, இது சரியான நேரம். ரஜினி, அரசியலுக்கு வந்து, மக்கள் மற்றும் நாட்டின் நலனை காப்பாற்றுவதை பார்க்க, நாடே காத்துக் கொண்டிருக்கிறது. மக்கள், உங்களுடன் சேரத் தயாராக உள்ளனர். வேறு கட்சியில் சேருவதற்கு முயற்சிக்கவேண்டாம்.
உதவத் தயார் : குடும்பத்தார், நெருங்கியவர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களுடன் கலந்து பேசி விரைவில் சரியான முடிவை எடுப்பீர்கள் என நம்புகிறேன். நண்பனாக, நலம் விரும்பியாக, வழிகாட்டியாக, எப்போதும் நான் உங்கள் பக்கம் இருப்பேன். எந்த நேரத்திலும், உங்களுக்கு உதவத் தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சத்ருகன் சின்ஹா, பழைய ஹிந்தி படங்களில் ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தியவர். அவரை பின்பற்றியே தானும் ஸ்டைலாக நடித்ததாக ஏற்கனவே ரஜினி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.