சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
காக்கா முட்டை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பைப்பார்த்து வியந்த இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பால், தான் இந்தியில் தயாரித்து நடிக்கயிருந்த டாடி படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தார். அதையடுத்து பெரிய அளவில் பில்டப் செய்திகள் வெளியாகி வந்தன. அதோடு, அடுத்தபடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மும்பையில் அவர் செட்டிலாகி விடுவார் என்றெல்லாம் ஆளாலுக்கு பரபரப்பு செய்திகள் வெளியிட்டனர்.
ஆனால், அப்படி பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், நடித்த அந்த டாடி இந்தி படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதோடு, அது ரொம்ப சின்ன படமாம். அதோடு, ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ரொம்ப சின்ன வேடம்தானாம். அதுகுறித்து அவர் கூறுகையில், நான் இந்தி படத்தில் நடிக்கிறேன் என்றதும் தமிழ் மீடியாக்கள் பெரிய பப்ளிசிட்டி கொடுத்தனர். நானும் அந்த படத்தில் பெரிய எதிர்பார்ப்போடுதான் நடிக்க சென்றேன். ஆனால் அங்கு சென்ற பிறகுதான் அது ரொம்ப சின்ன படம் என்று தெரிந்தது. கமிட்டானதால் அந்த படத்தில் நடித்தேன். மற்றபடி நான் இந்தி படத்தில் நடிக்கிறேன் என்று பில்டப் கொடுக்கிற அளவுக்கு அது பெரிய படமில்லை என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.