பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் |
அரவிந்த்சாமி-திரிஷா இணைந்து நடித்து வரும் படம் சதுரங்கவேட்டை-2. இந்த படத்தில் அவர்கள் இருவரும் எதிரும் புதிருமான வேடங்களில் நடித்து வந்தபோதிலும், அவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த மகள் வேடத்தில் மானஸ்வி என்ற 4 வயது சிறுமி நடித்து வருகிறார். இவர் காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் ஆவார். அந்தவகையில், சமீபத்தில் அரவிந்த்சாமி-மானஸ்வி சம்பந்தப்பட்ட ஒரு செண்டிமென்ட் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நயன்தாரா நாயகியாக நடித்து வரும் இமைக்கா நொடிகள் படத்திலும் அவரது மகளாக நடிக்கிறார் மானஸ்வி. அந்த படத்திலும் அம்மா-மகளுக்கான ஒரு மான்டேஜ் பாடல் உள்ளதாம். இப்படி ஒரே நேரத்தில் அரவிந்த்சாமி, திரிஷா, நயன்தாரா என முன்னணி நடிகர் நடிகைகளின் மகளாக நடித்து வரும் மானஸ்வி, கண்மணி என்ற ஒரு படத்தில் டைட்டீல் ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் ஹாரர் கதையில் தயாராகி வருகிறது.