சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ்நாட்டிலுள்ள சினிமா ரசிகர்கள் நடிகர் நடிகைகளை திரையில் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்வதில்லை. அவர்களை தெய்வங்களாக கருதுபவர்களும் உண்டு. அந்த வகையில், குஷ்பு சினிமாவில் பிரபலமாக நடித்து வந்த போது அவருக்கு கோயில் கட்டி தினமும் பூஜையெல்லாம் நடத்தினார்களாம் தமிழ்நாட்டு ரசிகர்கள்.
இந்நிலையில், தற்போது விஜய்க்கும் அவரது ரசிகர்கள் சிலை வடித்து அதற்கு தீபாராதனை காண்பித்து வணங்கி வருகின்றனர். இந்த மாதிரி ஒரு வீடியோ தற்போது இணையதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. அப்படி விஜய்யை வணங்கும் அவரது ரசிகர்கள், ஐயப்பன் கோயில்களுக்கு செல்பவர்கள் கழுத்தில் அணிவது போன்று ஒரு மாலையை விஜய்யின் சிலையிடம் காண்பித்து விட்டு பின்னர் தங்களது கழுத்தில் அணிந்து கொள்கிறார்கள். அதையடுத்து கடவுளே விஜய், பைரவா விஜய் என்று விஜய் நடித்த படங்களின் பெயர்களை சொல்லியபடியே பிரார்த்தனை செய்கிறார்கள்.