சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
திருமணத்துக்குப் பிறகு கதாநாயகி நடிகைகள் மார்க்கெட் இழந்துவிடுவார்கள் என்பதுதான் கடந்த காலங்களில் நாம் கண்ட காட்சிகள். காரணம், திருமணம் ஆனதால் கவர்ச்சியாக நடிக்க மாட்டர்கள், நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்க மாட்டார்கள், முத்தக்காட்சியில் நடிக்க மாட்டார்கள் என்பதால் திருமணம் ஆன நடிகைகளை ஹீரோக்கள் ஒதுக்கிவிடுவார்கள்.
இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகு அமலாபாலையும் இப்படித்தான் ஒதுக்கிவைத்தனர். கணவரை விவாகரத்து செய்த பிறகு, இப்போது அதிக படங்களை கையில் வைத்துகொண்டு பிசியாக நடித்து வரும் நடிகையாகிவிட்டார் அமலாபால்! அவர் கைவசம் இப்போது சுமார் 8 படங்கள் இருக்கின்றன.
பாபிசிம்ஹா நடிக்கும் 'திருட்டுப் பயலே-2', 'முண்டாசுபட்டி' ராம் இயக்கத்தில் விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாக 'மின் மினி', சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி-2', சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமியுடன் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார்.
இவை தவிர,'செஞ்சுரியன் ஃபிலிம்ஸ்' ஜோன்ஸ் தயாரிக்கும் படம், ரேவதி இயக்கும் 'குயின்' ஹிந்தி படத்தின் மலையாள ரீ-மேக், கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அச்சாயன்ஸ்', அனூப் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இன்னொரு படம் என மலையாளத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார் அமலாபால்.
இவர் நடிப்பில் 'ஹெப்புலி' என்ற கன்னடப்படம் 75 நாட்களை கடந்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிகையாக அமலாபால் இருக்கிறார். அதனால்தான் அவருக்கு இவ்வளவு படங்கள் தேடி வந்துள்ளன.