நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
கே.ஆர்.பிலிம்ஸ் சார்பில் சரவணன், கார்த்தி தயாரிக்கும் படம் கிரகணம். கிருஷ்ணா, கயல் சந்திரன், ஆகியோருடன் நந்தினி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் கருணாஸ், ஜெயபிரகாஷ், பாண்டி உள்பட பலர் நடிக்கிறார்கள். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். இது ஒரு மணி நேரத்தில் நடக்கும் கதை என்கிறார் இயக்குனர் இளன். அவர் மேலும் கூறியதாவது:
ஒரு நாளில் நடக்கிற கதை, ஒரு இரவில் நடக்கிற கதை ஏராளமாக வந்துவிட்டது. இது ஒரு மணி நேரத்தில் நடக்கிற கதை. அதையே இரண்டேகால் மணி நேர விறுவிறுப்பான படமாக உருவாக்கி இருக்கிறோம். கதையின் கதாபாத்திரங்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அவர்கள் வாழ்க்கையில் இருள் சூழ்கிறது. ஆனால் அவர்களை சூழ்ந்த அந்த இருள் சந்திரகிரகணம் நடக்கும் ஒரு மணிநேரத்தில் தீர்கிறது. அது எப்படி என்பது தான் திரைக்கதை. அவர்கள் பிரச்சினைக்கும், சந்திரகிரகணத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது கதையின் டுவிட்ஸ்ட் என்கிறார் இயக்குனர் இளன்.