சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி என்ற இரண்டு ஜாம்பவான்களுக்கு மத்தியில் தன் திரைப் பயணத்தை நடத்தியவர் ஜெமினி கணேசன். எம்.ஜி.ஆர் ஹீரோயிச ஸ்டைல்களால் மக்களை கவர்ந்தார். சிவாஜி உருக உருக நடித்து மக்களை கவர்ந்தார். ஆனால் ஜெமினி காதல் படங்களின் மூலம் தன்னை நிலை நிறுத்தினார்.
ஜெமினி கணேசன் சிவாஜியுடன் இணைந்து 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால் எம்.ஜி.ஆருடன் நடிக்காமல் இருந்தார். எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்தும் நடிகைகள் எல்லோருமே அடுத்த படத்தில் ஜெமினிக்கு ஜோடியாக நடித்து விடுவார்கள். இதனால் எம்.ஜி.ஆருக்கு ஜெமினி மீது கோபம் அதனால் இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்ற ஒரு பேச்சு அப்போது இருந்தது.
அதை மாற்ற விரும்பினார் எம்.ஜி.ஆர். 1966ம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் சார்பில் சாண்டோ சின்னப்பா தேவர் முகராசி என்ற படத்தை தயாரித்தார். இதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஜெயந்தி, நம்பியார், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக இருந்தது. இது ஒரு மர்டர் மிஸ்ட்ரி படம். அதாவது ஒரு கொலையை துப்பறியும் போலீஸ் அதிகாரியின் கதை. போலீஸ் அதிகாரியாக எம்.ஜி.ஆர் நடித்தார்.
இந்த கதையில் போலீஸ் அதிகாரியின் அண்ணன் கேரக்டர் மிகவும் முக்கியமானது. அப்போது எம்.ஜி.ஆரின் அண்ணனாக நடிக்க அசோகன், பாலாஜி, எம்.ஜி.சக்ரபாணி ஆகியோரது பெயர்கள் வழக்கம்போல பரிசீலிக்கப்பட்டது. இந்த கேரக்டரில் ஜெமினி நடித்தால் நன்றாக இருக்கும் கேட்டுப் பாருங்கள் என்றார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரே தன்னை தேர்வு செய்தார் என்று தெரிந்தவுடன் மறுப்பு ஏதும் சொல்லாமல் நடித்தார் ஜெமினி. படத்தை 12 நாட்களில் எடுத்து முடித்தார். டைரக்டர் எம்.ஏ.திருமுகம். படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. ஆனாலும் எம்.ஜி.ஆரும், ஜெமினி கணேசனும் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை.