சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
'பாகுபலி 2' திரைப்படம் பற்றித்தான் இந்த வாரம் முழுவதும் பேச்சாக இருக்கும். இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ள இப்படத்தின் வியாபாரம் எத்தனை கோடி ரூபாய்க்கு நடந்தது என்பது பற்றிய விவரங்கள் தற்போதுதான் வெளியாகியுள்ளன. இப்படத்தின் வியாபாரம் சுமார் 440 கோடி ரூபாய் வரை நடந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே இந்த அளவிற்கு வியாபாரம் நடைபெற்றுள்ள முதல் படம் 'பாகுபலி 2' என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் தமிழ்நாட்டு வினியோக உரிமை சுமார் 47 கோடி. ஆந்திரா, தெலுங்கானா உரிமை 122 கோடி, கர்நாடகா உரிமை 36 கோடி, கேரளா உரிமை 11 கோடி. மற்ற இந்திய மாநிலங்களின் உரிமை 70 கோடி. அமெரிக்கா உரிமை மட்டும் 44 கோடி, உலகின் மற்ற நாடுகளின் உரிமை 20 கோடி.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி இசை உரிமை 10 கோடி, தமிழ், தெலுங்கு சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமை 28 கோடி, ஹிந்தி தொலைக்காட்சி உரிமை 50 கோடி என சுமார் 438 கோடி வரை வியாபாரம் நடைபெற்றுள்ளது. இன்னும் வெளியீட்டுக்கு முன் நடைபெற்ற இசை வெளியீட்டு தொலைக்காட்சி உரிமைகள், டிஜிட்டல் உரிமைகள், அனிமேஷன் உரிமைகள், டிவி தொடர் உரிமைகள், நாவல்கள் என மற்ற உரிமைகளின் விலைகளையும் சேர்த்தால் சுமார் 500 கோடியைத் தொடும் என்கிறார்கள்.
எப்படியும் படத்தின் வசூல் 500 கோடியைத் தாண்டிவிடும் என்று வினியோக வட்டாரங்களில் உறுதியாகச் சொல்கிறார்கள். இந்திய அளவிலும், உலக அளவிலும் வேறு எந்த இந்தியத் திரைப்படங்களும் இந்த வாரத்தில் வெளியாகவில்லை. கோடை விடுமுறை நாட்கள் என்பதால் குடும்பத்தினர் அனைவரும் படத்தைப் பார்க்க வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒரு முறை படத்தைப் பார்ப்பவர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கும் நிலையும் வரலாம். எனவே, படம் எப்படியும் 1000 கோடி வசூலைத் தாண்டும் என்கிறார்கள். படத்தின் வசூல் 500 கோடியைத் தாண்டினாலே மாபெரும் வெற்றி எனத் தாராளமாகச் சொல்லிக் கொள்ளலாம். 'பாகுபலி 2' படத்திற்கான எதிர்பார்ப்பு தெலுங்குத் திரையுலகினரை பெருமிதம் கொள்ள வைத்திருக்கிறது.