சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சூர்யா பங்குதாரராக உள்ள 'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்த 'மாநகரம்' படம் கடந்த மாதம் வெளியானது. சென்னை நகரில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு சில திரையரங்குகளில் ஓரிரு காட்சிகளில் 6 ஆவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னை தவிர்த்த மற்ற ஊர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே திரையரங்குகளில் இருந்து தூக்கிவிட்டனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதாவது, பிரான்ஸில் நடைபெறும் 5 ஆவது துலூஸ் இந்திய திரைப்பட விழாவில் (Toulouse India Film Festival) திரையிடுவதற்கு 'மாநகரம்' படம் தேர்வாகியுள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இந்த திரைப்படவிழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில், பார்வையாளர் விருதுக்கு இந்தியாவிலிருந்து மொத்தம் 7 படங்கள் தேர்வாகியுள்ளன. ஒனாட்டா, காபில், சாங்ள் ஆகிய படங்களுடன் நான் கடவுள், வாகை சூட வா, இறுதிச்சுற்று, மாநகரம் ஆகிய 4 தமிழ்ப் படங்களும் தேர்வாகி உள்ளன. இதில் 'மாநகரம்' திரைப்படம் 30ஆம் தேதி திரையிடப்பட உள்ளது.