சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
முதல் படத்திலே தேசிய விருது பெற்றவர் ரித்திகா சிங். விளையாட்டு துறையில் இருந்து, சினிமா துறைக்கு வந்தவர். இவரது நடிப்பில் வெளிவர உள்ள சிவலிங்கா படம் குறித்து, மனம் திறந்து பேசுகிறார்.
சிவலிங்கா படம் குறித்து?
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், லாரன்ஸ் ஜோடியாக, நடித்திருக்கிறேன். கன்னடத்தில், வேதிகா, இந்த ரோலை, சிறப்பாக நடித்திருந்தார். முடிந்தவரை நானும், சிறப்பாக செய்திருக்கேன். இந்த படத்தில், டான்ஸ், பாட்டு, நடிப்பு என்று வேற ரித்திகாவை, ரசிகர்கள் பார்ப்பது நிச்சயம்.
இந்த படத்தில், கவர்ச்சியாக நடித்திருப்பதாக...
பாடல் காட்சிகளுக்கு தேவைப்பட்டதால், அதற்கு ஏற்ற உடைகளை அணிந்து நடித்திருக்கிறேன்.பாடலை பார்க்கும் போது, நிச்சயம் ஆபாசமாக இருக்காது. எனக்கு டான்ஸ், சுத்தமாக தெரியாது. இந்த படமே, எனக்கு பெரிய சவாலாக இருந்தது.லாரன்ஸ் மாஸ்டருடன் டான்ஸ் ஆடுவது எளிதான விஷயம் இல்லை. ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடும் போது, முழங்காலில் காயம் ஏற்பட்டது. ஆனாலும், அதை எல்லாம் சமாளித்து தான், நடித்தேன்.
புடவை அணிந்து நடித்த அனுபவம்?
சொன்னா நம்ப மாட்டிங்க; அந்த புடவை, கட்டியதில் இருந்து, பத்தாயிரம் முறை, நழுவி கீழே விழுந்திருக்கும். புடவை கட்டி, எனக்கு பழக்கமே இல்லை; புடவையுடன் டான்ஸ் ஆடியது, சிரமமாகவும்,வித்தியாசமாகவும் இருந்தது.
பாக்சிங், ஆக்டிங் எது சுலபம்?
நான், பாக்சிங் வீராங்கனையாக இருப்பதால், பாக்சிங் ரொம்ப சுலபம்; நடிப்பு கஷ்டம். மூன்று வயதில் இருந்தே, கராத்தே, பாக்சிங் கற்று வருகிறேன். நடிப்பிற்கும், நடனத்துக்கும் இன்னும் அதிக பயிற்சி எடுக்க வேண்டும்.
உங்களை யாராவது காதலித்தது உண்டா?
என்னவோ தெரியவில்லை; என்னை பார்த்தாலே எல்லாரும் பயப்படுறாங்க; எனக்கு, நெருக்கமான நட்புகள் சினிமாவில் கிடையாது. யாராவது என்னிடம் வந்து, 'லவ்' சொன்னால், 'எனக்கு விருப்பம் இல்லை' எனக் கூறி, அனுப்பி விடுவேன்; காதலிப்பதற்கெல்லாம், எனக்கு நேரம் இல்லை.
சென்னையில் பிடித்த சாப்பாடு?
இடியாப்பம், ரசம், அப்பளம், கொஞ்சம் அசைவம் சாப்பிடுவேன்.
உங்களுக்கு வெட்கப்பட தெரியுமா?
சத்தியமாக தெரியாது; நான் எதற்கு வெட்கப்பட வேண்டும்? திருமணத்தன்று, மணமேடையில் இருக்கும் போது கூட வெட்கப்பட மாட்டேன். அதெல்லாம், எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது.