தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
1984ம் ஆண்டு வெளிவந்த படம் நல்லவனுக்கு நல்லவன். எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். விசு வசனம் எழுதியிருந்தார். ரஜினி, கார்த்திக், ராதிகா நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். பாபு ஒளிப்பதிவு செய்திருந்தார். ‛‛உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே..., சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது..., நம்ம முதலாளி நல்ல முதலாளி..., வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள...'' போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் இடம்பெற்ற படம்.
இந்தப் படம் தெலுங்கில் வெளிவந்த தர்மாத்முடு என்ற படத்தின் ரீமேக். யாருக்குமே அடங்காத தாதா ஒரு பெண்ணின் அன்புக்கு அடங்கி செய்த தவறுக்காக சிறை சென்று திரும்பி, ஒரு தொழிலாளியாக தன் வாழ்க்கையை தொடங்கி அதன் பிறகு படிப்படியாக முன்னுக்கு வருகிற மாதிரியான கதை. இந்த படம் குடும்ப செண்டிமென்ட் கலந்த ஆக்ஷன் படம். ஆனால் தெலுங்கு படத்தில் உருக்கமான கிளைமாக்ஸ் இருந்தது. அதேபோன்று தமிழிலும் உருக்கமான கிளைமாக்ஸ் வைத்திருந்தார் எஸ்.பி.முத்துராமன்.
ஆனால் இந்த கிளைமாக்ஸ் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனுக்கு பிடிக்கவில்லை. அதிரடி ஆக்ஷன் படமாக காட்டிவிட்டு உருக்கமான கிளைமாக்ஸ் வைத்தால் எடுபடாது என்றார். படம் சென்சாராகி இருந்தது. அதன்பிறகு கார்த்திக்கை எதிரிகள் கடத்தி விடுவது போலவும் அவரை ரஜினி சண்டை போட்டு காப்பாற்றி வருவது போலவும் இன்னொரு கிளைமாக்ஸ் எடுத்து அதற்கென்று தனியாக தணிக்கை சான்றிதழ் வாங்கினார்கள். அதன் பிறகு இயக்குனர்கள், தயாரிப்பாளாகள், ரசிகர்கள் என பலரை அழைத்து இரண்டு கிளைமாக்சையும் போட்டுக் காட்டியதில் ஆக்ஷன் கிளைமாக்ஸ்தான் சரி என்ற எல்லோரும் சொல்ல அந்த கிளைமாக்சுடன் படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.