சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சினிமாவை எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதை பாலிவுட்டிலிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கியுள்ள 'பாகுபலி' 2 படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான பாகுபலி முதல் பாகம் படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு காரணமாக 2 ஆம் பாகத்தைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். பாகுபலி' படத்தின் 2ஆம் பாகத்தின் டிரைலர் யு ட்யூபில் கிட்டத்தட்ட 10 கோடி ஹிட்ஸை எட்டியுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் ஹிந்தி வெளியீட்டு உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் வாங்கியிருக்கிறார். பாகுபலி-2 ஹிந்தி டப்பிங்கை பெரிய விலை கொடுத்து வாங்கியதால் படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக்கியே தீரவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
அதில் ஒரு முயற்சியாக, 'பாகுபலி'யின் முதல் பாகத்தின் கதையை ரசிகர்களுக்கு மீண்டும் நினைவூட்டுவதற்காக, அப்படத்தை வரும் 7ஆம் தேதி வட இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவிருப்பதாக கரண் ஜோஹர் அறிவித்துள்ளார். ஹிந்தியில் கரன்ஜோஹர் வெளியிடுவதை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பாகுபலி படத்தின் முதல் பாகத்தை மீண்டும் வெளியிடப்படுகிறது.