சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் சினிமாவில் மார்ச் மாதம் பொதுவாகவே ஒரு 'டல்'லான மாதமாக இருக்கும். தேர்வு சமயங்கள் என்பதால் அதிகமான படங்கள் வெளிவராது. இருந்தாலும் தயாரிப்பில் பல படங்கள் இருப்பதாலும், ஏப்ரல் மாதங்களில் பெரிய படங்கள் இருப்பதாலும் மார்ச் மாதத்தில் படங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு சிலர் ஆளாகிறார்கள்.
நாளை மார்ச் மாதத்தின் மூன்றாவது வெள்ளிக் கிழமையில் “ப்ரூஸ் லீ, கட்டப்பாவ காணோம், ஒரு முகத்திரை, கன்னா பின்னா, வாங்க வாங்க'' ஆகிய ஐந்து படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்த 'விழித்திரு' படம் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள 'ப்ரூஸ் லீ' படம் முடிவடைந்து சில மாதங்களாகிவிட்டது. இதற்குமுன் சிலமுறை ரிலீஸ் தேவி அறிவிக்கப்பட்டு அவற்றைத் தள்ளி வைத்து நாளை உறுதியாக வெளிவருகிறார்கள். பிரசாந்த் பாண்டிராஜின் முதல் படம். ஜி.வி.பிரகாஷுக்கு தொடர்ச்சியாக எந்தப் படங்களும் கை கொடுக்காத நிலையில் 'ப்ரூஸ் லீ' படமாவது கை கொடுத்தால்தான் அவருடைய எதிர்கால மார்க்கெட்டுக்கு நல்லது.
'ஜாக்சன் துரை' படத்திற்கப் பிறகு சிபிராஜ் நடித்துள்ள படம் 'கட்டப்பாவ காணோம்'. நகைச்சுவை கலந்த படமாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. மணி சேயோன் இயக்கும் முதல் படம் இது. 'பாகுபலி' படத்தில் சத்யராஜ் நடித்த 'கட்டப்பா' கதாபாத்திரம் பிரபலமானதால் அந்தக் 'கட்டப்பா'வை இந்தப் படத்தின் தலைப்பில் சேர்த்துவிட்டார்கள்.
'ப்ரூஸ் லீ, கட்டப்பாவா காணோம்' படங்களுக்கிடையேதான் நாளைய போட்டி. மற்றபடி வெளியாகும் 'கன்னா பின்னா, வாங்க வாங்க, ஒரு முகத்திரை' ஆகிய படங்களைப் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்டவர்களே அதிகமாக வெளியிடவில்லை. அப்புறம் எப்படி ரசிகர்களுக்கு அந்தப் படங்களைப் பற்றித் தெரியும். சிறிய படங்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. படங்கள் பற்றிய விவரங்களையோ, புகைப்படங்களையோ கூட வெளியே விடாமல் வைத்துவிட்டு, சிறிய படங்கள் ஓடவில்லை என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.