நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு |
ஜாக்கிசான், அமைரா தஸ்துர், சோனு சூட் நடித்த குங்பூ யோகா படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்தியா, சீனா கூட்டுத் தயாரிப்பான இந்தப் படம் வெற்றி பெறாமல் போனது. இந்த நிலையில் ஜாக்கிசான் நடித்த ஜப்பானிய படம் ஒன்றை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள்.
ரெயில்ரோட் டைகர்ஸ் என்ற இந்தப் படத்தை டிங் ஷாங் இயக்கி உள்ளார். இவர் ஜாக்கிசான் நடித்த போலீஸ் ஸ்டோரி, ஹீமேன், லிட்டில் பிக் சோல்ஜர் உள்பட பல ஹாலிவுட் படங்களை இயக்கியவர். படத்தில் ஜாக்கிசானுடன் ஹங் ஜிட்டோ, வாங் கை, ட்ரான் வாங் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கடந்த டிசம்பர் மாதம் ஜப்பானில் வெளியான இந்தப் படம் இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது.ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கில் வெளியிடப்படுகிறது.
ஜப்பானில் உள்ள தியான்ஜின் நகரில் இருந்து கிழக்கு சீனாவில் உள்ள நன்ஜின் நகருக்கு ஒரு ரெயிலில் சுதந்திர போராட்டக்காரர்களை அழைத்துச் செல்கிறார் ராணுவ கேப்டன் ஜாக்கிசான். அவர்களிடம் ஆயுதம் எதுவும் கிடையாது. இந்த வீரர்களை அழிக்க இன்னொரு குரூப் பெரும் ஆயுதங்களுடன் வருகிறது. ரெயிலில் பயணம் செய்து கொண்டே ஆயுதம் எதுவும் இல்லாமல் ஜாக்கிசான் தலைமையிலான விடுதலை வீரர்கள் அந்த கூட்டத்தை எதிர்கெண்டு எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்கிற கதை. பரபரப்பான சண்டை காட்சிகள் நிறைந்தது. பெரும்பான்மையான காட்சிகள் ரெயிலிலேயே நடக்கிற மாதிரியான கதை.