சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இதுவரை நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும், பாடகராகவும் இருந்த தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் பவர் பாண்டி. இதில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயா சிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். தனுஷ், ரேவதி, கவுதம் மேனன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். தனுஷ் இளம் வயது ராஜ்கிரணாக நடித்துள்ளார்.
தனுஷின் வொண்டர்ஃபார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். மூன்று கட்டமாக நடந்த இதன் படப்பிடிப்புகள் நேற்று முடிந்தது. நடிகர் ராஜ்கிரண் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்து படப்பிடிப்பை முடித்து வைத்தார். ஏற்கனவே போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் ஆரம்பமாகிவிட்டன. வருகிற ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.