பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

சிறந்த குணச்சித்திர கதாபாத்திரத்துக்காக புகழ்பெற்ற வனிதா விருதை நடிகை ரோகினி பெற்றுள்ளார்.
மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‛ஆக்சன் ஹீரோ பிஜு'. இப்படத்தில் ரோகினி முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இதைப்போன்று ஜான் பால் ஜார்ஜ் இயக்கத்தில் வெளிவந்த கப்பி படத்திலும் ரோகினி முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இந்த படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ரோகினிக்கு வனிதா விருது வழங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் நடிகை ரோகினி, பாகுபலி படத்தில் ஏற்று நடித்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.




