தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! | விஜய் அரசியல் வருகை குறித்து நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி பதில்! | விக்ரம் 63 படத்தின் புதிய அப்டேட்! | கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழா: திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | திருமண நிச்சயதார்த்தம் நடந்தது: வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிநயா! |
தமிழ் சினிமாவில் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் பஞ்சு அருணாசலம். 80களில் ரஜினிகாந்த், பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன் சேர்ந்து பணியாற்றும் படம் என்றால் பூஜை அன்றே எல்லா படங்களும் விற்றுப்போகும். 75 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை வசனம் எழுதியவர், நான்கைந்து படங்கள் இயக்கியவர், 50 பாடல்களுக்கு மேல் எழுதியவர். இப்படி வெற்றிகரமாக வலம் வந்த பஞ்சு அருணாசலத்துக்கு ஆரம்ப காலத்தில் சினிமா உலகம் வைத்த பெயர் பாதிக் கதை பஞ்சு அருணாசலம்.
காரைக்குடி அருகில் உள்ள சிறுகூடல்பட்டி கிராமத்திலிருந்து சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தவர் பஞ்சு அருணாசலம். பரணி ஸ்டூடியோவில் செட் அசிஸ்டெண்டாக வேலை செய்தவர் பின்னர் கண்ணதாசன் நடத்திய தென்றல் பத்திரிக்கையில் பிழை திருத்துனராக வேலை பார்த்தார். பின்னர் கண்ணதாசனின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் ஆனார். கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் மனஸ்தாபம் இருந்தபோது கண்ணதாசனுக்கு பதிலாக இவர் பாடல் எழுதி பாடலாசிரியரானார்.
அதன் பிறகு கதை விவாதங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். சினிமாவுக்கு தானே பல கதைகளை எழுதினார். அந்த கதைகளை எடுக்க சிலர் முன்வந்தார்கள். பஞ்சு அருணாசலத்திடம் கதை வாங்கிக் கொண்டு போய் படத்தை எடுப்பார்கள். பின்னர் அந்தப் படம் பாதியிலேயே நின்று போகும். இப்படி பஞ்சு அருணாசலம் கதை எழுதிய 8 படங்கள் பாதியில் நின்று விட்டது. இதனால் அவரை எல்லோரும் பாதிக் கதை பஞ்சு அருணாசலம் என்று கிண்டலாக அழைக்க ஆரம்பித்தார்கள்.
சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி பஞ்சு அருணாசலத்தின் கல்யாணமாம் கல்யாணம் என்ற கதையை படமாக இயக்கினார். அது வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு வருடத்திற்கு நான்கைந்து படத்துக்கு கதை,வசனம் எழுதி வெற்றிகரமான கதாசிரியராக வலம் வந்தார். பாதியில் நின்ற 8 படங்களில் 5 கதையில் சில மாற்றங்கள் செய்து அதையும் வெற்றிப்படமாக்கினார்.