அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
ராமராஜன் நடித்த மேதை மற்றும் அரும்பு மீசை குறும்பு பார்வை உள்பட சில படங்களில் நாயகியாக நடித்தவர் சாரிகா. அந்த படங்களில் அடக்க ஒடுக்கமான கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அந்த படங்கள் வெற்றியாக அமையவில்லை. இதனால் சரியான படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த அவர், நிராயுதம் என்றொரு கிளாமர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் பல காட்சிகளில் பேப்பரை உடையாக அணிந்து நடித்திருந்தார். ஆனாலும் அவருக்கு படங்கள் இல்லை.
இந்நிலையில், தற்போது மாயமோகினி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் சாரிகா. இந்த படத்தில் நடிகை குஷ்புவின் தம்பி அப்துல்லா நாயகனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் கே.ஆர்.விஜயா, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சாரிகாவுக்கு பேய் வேடமாம். இந்த வேடத்திற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி நடித்துள்ள சாரிகா, இதற்கு முன்பு நான் ஹோம்லியாக, கிளாமராக நடித்த படங்கள் எனக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. ஆனால் இந்த மாயமோகினி படத்தில் மிரட்டல் பேயாக நடித்திருக்கிறேன். இந்த வேடம் கண்டிப்பாக எனக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார்.