சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
லிங்குசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஷால் நாயகனாக நடிக்க உள்ள படம் 'சண்டக்கோழி 2.' இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, இயக்குனர் லிங்குசாமி இருவரும் பாடல்கள் உருவாக்கத்தை ஆரம்பித்துவிட்டனர்.
'சண்டக்கோழி' படத்தின் முதல் பாகம் 2005ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. விஷாலுக்கு ஒரு கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்தையும் அந்தப் படம் பெற்றுத் தந்தது. அதன்பின் விஷாலுக்கும், இயக்குனர் லிங்குசாமிக்கும் சண்டை வந்து இருவரும் பிரிந்தார்கள். 10 வருடங்கள் கழித்து மீண்டும் சமரசம் செய்து கொண்டு 'சண்டக்கோழி 2' படத்தை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்தார்கள். ஆனால், மீண்டும் இருவருக்கும் சண்டை வந்து, படத்தை கைவிடுவதாக விஷால் அறிவித்தார். பின்னர் சிலரது முயற்சியால் இருவரும் மீண்டும் படத்தை ஆரம்பிக்க முடிவெடுத்தார்கள்.
இடையில் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் நடிக்க ஒரு படத்தை லிங்குசாமி இயக்கப் போவதாக நட்சத்திர ஹோட்டலில் மிகப் பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தி அறிவித்தார்கள். இப்போது அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டு 'சண்டைக்கோழி 2' வேலைகளில் இறங்கிவிட்டார் லிங்குசாமி. விஷால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்த மாதம் முதல் 'சண்டக்கோழி 2' படத்தில் நடிக்க உள்ளார்.
'ரஜினி முருகன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இமான் தான் 'சண்டக்கோழி 2' படத்தின் இசையமைப்பாளர் என்று அறிவித்தார்கள். அதுவும் மாற்றப்பட்டு 'சண்டக்கோழி' படத்திற்கு இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
லிங்குசாமி - யுவன்ஷங்கர்ராஜா கூட்டணியில் வெளிவந்த படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பிடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.