சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் நடித்திருக்கும் படம் - 'சிவலிங்கா. கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் நடிக்க பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'சிவலிங்கா' படத்தின் தமிழ் ரீ-மேக்காக இப்படம் உருவாகியிருக்கிறது. எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை வெளியாகவிருக்கிறது.
'காஞ்சனா-2' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'சிவலிங்கா' படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். பைரவா ஃபீவரில் உள்ள தியேட்டர்காரர்கள் 'சிவலிங்கா' படத்தை கண்டு கொள்ளவில்லை.
முட்டிமோதி எப்படியாவது படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்று முயற்சி செய்து பார்த்தார் தயாரிப்பாளர். 100 தியேட்டர்கள் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்தது. பின்னர் ஜனவரி 26 அன்று வெளியிடலாமா என்று ஆலோசித்துள்ளனர். அந்த தேதியில் சிங்கம்-3 வெளிவருவதால் அப்போதும் போதிய தியேட்டர் கிடைக்காது என்பதால் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். பிப்ரவரியிலும் ஏகப்பட்ட படங்கள் வெளியாக வரிசையில் காத்திருக்கின்றன.