சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் கடம்பன். காட்டுவாசி வேடத்தில் நடித்துள்ள இந்த படத்திற்காக பாங்காங் நாட்டு யானைகளுடன் இணைந்து நடித்துள்ளார் ஆர்யா. அவருடன் கேத்ரின்தெரசா, சூப்பர் சூப்பராயன், ஆடுகளம் முருகதாஸ் உள்பட பலர் நடித்துள்ள அந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தேனாண்டாள் பிலிம்சுக்காக சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா சரித்திர படத்தில் ஜெயம்ரவியுடன் இணைந்து நடிக்கிறார்.
ஆனால் அந்த படத்திற்காக ஓன்றரை ஆண்டு கால்சீட் கொடுத்திருப்பதால் அப்படத்தில் நடிப்பதற்கு முன்பே அமீர் இயக்கும் சந்தனதேவன் படத்தில் தான் நடிக்க வேண்டிய காட்சிகளில் நடித்து கொடுத்து விடுகிறாராம் ஆர்யா. இதனால் ஏற்கனவே ப்ரீ புரொடக்சன்ஸ் வேலைகளில் ஈடுபட்டிருந்த அமீர், இப்போது இன்னும் துரிதமாகி விட்டார். தற்போது ஆர்யாவும் கடம்பன் வேலைகளை முடித்து விட்டதால், பொங்கல் முடிந்து சில தினங்களில் நடிகர்-நடிகையர் உள்ளிட்ட யூனிட்டுடன் தேனியில் முகாமிடுகிறார் அமீர்.