சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஜேஎஸ்கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் ஜே.சதீஷ் குமார் தயாரித்து, ராம் இயக்கி இருக்கும் திரைப்படம் தரமணி. மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, 'From the Bottom of Our Hearts' என்னும் காணொளியை உருவாக்கி, அதை யூ டூபில் தரமணி படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். வெளியான சிறிது நேரத்திலேயே, இந்த காணொளி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவ ஆரம்பித்து விட்டது. யுவன்ஷங்கர் ராஜாவின் நெஞ்சை வருடும் இசையில் உருவாகி இருக்கும் தரமணி பாடல்களை ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 30-ம் தேதி) வெளியிட்டார்.
இதுப்பற்றி இயக்குநர் ராம் கூறியதாவது... "தரமணி படத்தின் பாடல்களை ரஜினி சார் வெளியிட்டிருப்பது எங்களுக்கு உற்சாகம் ஊட்டி இருக்கிறது. அதேசமயத்தில், மறைந்த என்னுடைய நண்பர் நா.முத்துக்குமாரை நினைத்து என் உள்ளம் வருந்துகிறது. 1500-க்கும் அதிகமான பாடல்கள் மற்றும் இரண்டு தேசிய விருதுகளை பெற்று, தமிழ் திரையுலகில், ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த பாடலாசிரியராக திகழ்ந்தவர் நா.முத்துக்குமார். அவருடைய எழுத்துக்களுக்கு என்றுமே முற்று புள்ளி இருக்காது'' என்றார்.
யுவன்ஷங்கர் ராஜா கூறியதாவது... "என்னுடைய இசை பயணத்தில் மிக முக்கிய மைல் கல்லாக இருந்தது, நா முத்துக்குமாரின் பாடல் வரிகள். இந்த தரமணி பாடல்களை எங்களின் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அவருக்கு சமர்ப்பணம் செய்கின்றோம்" என்றார்.