அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
கவர்ச்சி நாயகியாக கலக்கி வந்த நமீதா, தனது ஹீரோயினி மார்க்கெட் டவுனானதும் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் பா.விஜய் நாயகனாக நடித்த இளைஞன் படத்தில் வில்லியாக நடித்தார். அதையடுத்து தற்போது பொட்டு படத்தில் அதிரடியான ஒரு அகோரி வேடத்தில் நடித்து வருகிறார். மீண்டும் கதாநாயகியாக வேண்டும் என்கிற நோக்கம் இல்லாமல் முழுநேர கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறி விட்ட நமீதா, எந்தமாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்கவும் தான் ரெடியாக இருப்பதாக கூறிவருகிறார்.
அவரைத் தொடர்ந்து இப்போது வாகை சூடவா இனியாவும் சில படங்களில் கேரக்டர் நடிகையாக நடித்து வருகிறார். குறிப்பாக, பாசிட்டிவ் வேடங்களில் நடித்து மார்க்கெட்டில் பரபரப்பு கூட்ட முடியாது என்பதால் தற்போது வில்லி வேடங்களில் நடிக்க தயாராக இருப்பதாக அபிமான டைரக்டர்களிடம் கூறி வருகிறார் இனியா. அந்த வகையில், செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் படத்தில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அவர். இதையடுத்தும் சொர்ணாக்கா ரேஞ்சுக்கு அதிரடியான வில்லி வேடங்களில் நடிக்கவும் ன் தயாராக இருப்பதாக கோலிவுட், டோலிவுட்டில் அதிரடி செய்தி வெளியிட்டுள்ளார் இனியா.