சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் முதலில் சிறு தொகையை அட்வான்ஸ் ஆக கொடுப்பார்கள். எஞ்சிய தொகையை பட வெளியீட்டின்போது தான் தயாரிப்பாளர்களுக்கு கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும் தொகையை ரொக்கமாகவே கொடுப்பார்கள். தற்போது 500,1000 ரூபாய் செல்லாத நோட்டுக்களாக அறிவிக்கப்பட்டதால் பல படங்களின் ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது.
'சென்னை 28' படத்தின் 2ஆம் பாகம் படமும் அதில் ஒன்று. 2007ல் வெளிவந்து வெற்றி பெற்ற 'சென்னை 28' படத்தின் குழுவினரால் தற்போது மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த அதே ஹீரோ, ஹீரோயின்களுடன் சில புதியவர்களும் இணைந்துள்ளனர். பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வெங்கட்பிரபு தயாரித்து, இயக்கியிருக்கும் இப்படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படம் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், நவம்பர் 25 ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
'சென்னை 28, 2வது இன்னிங்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் நிலவி வரும் பணத்தட்டுப்பாடு பிரச்சனையால் இப்போது 3 ஆவது முறையாக 'சென்னை 28, 2வது இன்னிங்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அறிவித்துள்ளனர். அதாவது, படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 9 என உறுதியாக அறிவித்துள்ளனர்.
இந்தமுறையாவது படம் உறுதியாக ரிலீஸாமா? என்று கேட்டால் நிச்சயம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினரால் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டிசம்பர் 9 அன்றும் படம் வெளியாக வாய்ப்பில்லை... ஜனவரிக்கு தள்ளிப்போகலாம் என்று படத்துறையில் பேச்சு அடிபடுகிறது. தள்ளிப்போகாதே என்று ரசிகர்களை பாட வைக்காமல் இருந்தால் சரிதான்..