சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இளம் ஹீரோக்களில் தற்போது சற்றே பின் தங்கியிருப்பவர் விமல். 2014 ஆம் ஆண்டு சுமார் அரை டஜன் படங்களில் நடிக்குமளவுக்கு பிசியாக இருந்த விமல், அவர் நடித்த படங்களின் தோல்வி காரணமாக பட வாய்ப்புகளை இழந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் விமல் நடித்தது மொத்தமே மூன்று படங்கள்தான். அவற்றில் இரண்டு படங்கள் இந்த வருடம் வெளிவந்தன. அஞ்சல, மாப்ள சிங்கம் ஆகிய படங்கள்தான் அவை.
தமிழ்ப்படம் என்ற படத்தை இயகக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 'ரெண்டாவது படம்' என்ற படத்தில் நடித்தார் விமல். அவர் நடித்து முடித்து நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கிறது ரெண்டாவது படம். இந்நிலையில், பூபதி பாண்டியன் இயக்கத்தில் 'மன்னர் வகையறா' என்ற படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் விமல். இந்தப் படத்தை அவரே தயாரிப்பதாக சொல்லப்பட்டது. பின்னர் வேறு ஒரு தயாரிப்பாளர் தயாரிக்க முன்வந்தார்.
இந்தப்படம் தவிர, சுசீந்திரன் தயாரிப்பில், அவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி சிவா என்பவரது இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார் விமல். இந்தப்படத்திற்கு பாண்டிராஜ் வசனமெழுதுகிறார். இமான் இசையமைக்க, விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படங்கள் தவிர 'ராஜதந்திரம்' படத்தை இயக்கிய அமித் இயக்கத்திலும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் விமல். இந்த படங்கள் எல்லாம் திட்டமிட்டபடி வெளியானால் 2014 ஆம் ஆண்டைப் போல 2017ஆம் ஆண்டு விமலுக்கு நிறைய படங்கள் ரிலீஸாவதற்கு வாய்ப்புள்ளது.