எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் |
அஜித்தின் மச்சினன் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்து வரும் படம் அந்தமான். மனோசித்ரா ஹீரோயின். சாம்ஸ், வையாபுரி, தலைவாசல் விஜய், நிழல்கள்ரவி, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.பி.எல்.செல்வதாஸ் இசை அமைத்துள்ளார், ஆர்.எஸ்.செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதா மூவீஸ் சார்பில் கண்ணதாசன் தயாரித்துள்ளார். பெரும்பகுதி படப்பிடிப்பு அந்தமானில் நடந்துள்ளது. படம் விரைவில் வெளிவர இருப்பதைத் தொடர்ந்து இயக்குனர் ஆதவன் படம் பற்றி கூறியதாவது:
ஊழல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி, பிரதமர் மோடி அறிவித்துள்ள 1000, 500 ரூபாய் நோட்டுகள் தடை குறித்த முடிவு, ஏற்கனவே சில படங்களில் சொல்லப்பட்ட யோசனை, என்பதால் அப்படக் குழுவினர் பெருமைக் கொண்டுள்ளனர். அந்த வகையில், விவசாய நிலங்களை, வீட்டு மனைகளாக்குவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டதற்கு, நாங்கள் பெருமை கொள்கிறோம். காரணம், 'அந்தமான்' படத்தின் கருவே ‛விளை'நிலங்களை ‛விலை'நிலங்களாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹீரோ போராடுவது தான்.
தற்போது விவசாய நிலங்களை, வீட்டு மனைகளாக பதிவு செய்யவோ, பட்டாவோ வழங்க கூடாது, என்று உயர் நீதிமன்றம் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் விவசாய நிலங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இதையே கருவாக கொண்டு எங்கள் படம் உருவாகியுள்ளதால் 'அந்தமான்' படக்குழுவினர் பெருமைக் கொள்கிறோம். விளைநிலங்கள் எல்லாம் விலை நிலங்களாகிக் கொண்டு இருப்பதை எதிர்த்து நிற்கும் ஒரு கல்லூரி மாணவன் போராளியாக மாறி, மண்ணாசைக் கொண்ட வில்லனை எதிர்த்து போராடுகிறான். அதில் அவன் வெற்றி பெற்றானா இல்லையா, என்பது தான் இப்படத்தின் கதை.
இப்படத்தின் பெரும்பகுதி அந்தமானில் படமாக்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களையும் பொருட்படுத்தாமல் பெரும் பொருட்ச்செலவோடு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களை மகிழ்விக்கவும் விரைவில் வெளிவருகிறது என்கிறார் இயக்குனர் ஆதவன்.