பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி. அஜித்தின் மைத்துனரான இவர் ‛காதல் வைரஸ்' படத்தில் நாயகனாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். ஹீரோவாக போராடி வரும் இவர், மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரெளபதி, ருத்ரதாண்டவம் படங்களுக்கு பின் ஓரளவுக்கு பேசப்படும் நடிகராகி உள்ளார். அடுத்து மோகன் ஜி இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் நெருக்கமாக உள்ளார். இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
யாஷிகா ஆனந்த் தனக்கு முத்தமிடும் போட்டோவை பகிர்ந்துள்ள ரிச்சர்ட் அதற்கு கேப்ஷனாக ‛‛சில இடங்களில் சூரியன் நம்மை முத்தமிடும் போது...'' என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு போட்டோவில் முத்தமிட்ட பின் என யாஷிகா உடன் நெருக்கமாக உள்ள மற்றொரு போட்டோவையும் பகிர்ந்துள்ளார். இதை வைத்து இருவரும் காதலிப்பதாக செய்தி பரவி வருகிறது. இதுதொடர்பாக யாஷிகாவை தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை.




