சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தற்போது கோலிவுட் மார்க்கெட்டில் சூரி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, சதீஷ், ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி, பாலசரவணன் என பல காமெடியன் கள் நடித்து வருகின்றனர். இவர்களில் இது என்ன மாயம், நானும் ரெளடிதான், தேவி படங்களில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி, தற்போது கடவுள் இருக்கான் குமாரு, கவலை வேண்டாம், காற்று வெளியிடை, தானா சேர்ந்த கூட்டம் என பல மெகா படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.
இந்த படங்களில் அவர் மட்டுமே தனி காமெடியன் என்பதால் படம் முழுக்க ஹீரோக்களுடன் டிராவல் பண்ணும் பாலாஜி, இந்த படங்களுக்கு பிறகு நானும் கமர்சியல் காமெடியனாகி விடுவேன் என்று கூறி வருகிறார். அதோடு, கிடைத்த இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, இப்படங்களில் இளைஞர்களை கவரும் வகையில், சந்தானம் பாணியில் டயமிங் காமெடிகளை அதிகமாக பேசி நடித்துள்ளாராம் ஆர்.ஜே.பாலாஜி. அதனால் இதுவரை நடித்த படங்களை விட இப்போது நடித்து வரும் படங்களில் எனக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய ரீச் கிடைக்கும் என்று அடித்து சொல்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.