சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஹாலிவுட்டின் பிரபல நடிகர் பியர்ஸ் பிராஸ்னன். ஜேம்பாண்ட் படங்களில் மிகவும் பிரலபமாக திகழ்ந்த ஜேம்பாண்ட் நடிகர்களில் இவர் முக்கியமானவர். இவர் நடித்த கோல்டன் ஐ, டுமாரோ நெவர் டைஸ், தி வேர்ல்டு இஸ் நாட் எனப், டை அனதர் டே போன்ற ஜேம்பாண்ட் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 60 வயதை கடந்துவிட்ட பியர்ஸ், சமீபத்தில் இந்தியாவில் உள்ள பிரபல பான்மசாலா நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். இந்த விளம்பரத்திற்கு இளையராஜாவின் வாரிசான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். உலகளவில் பிரபலமான ஜேம்ஸ்பாண்ட் நடிகர், உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் இப்படியொரு விளம்பரத்தில் நடித்துவிட்டாரே என கண்டன குரல்களும் எழுந்தன.
இந்நிலையில் பான்மசாலா பற்றி முழுமையாக தெரியாமல் நடித்துவிட்டேன், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன், உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காத பொருள் என்று சொல்லி தான் நடிக்க வைத்தனர் என்று கூறியுள்ளார் பியர்ஸ் பிராஸ்னன்.
இதுப்பற்றி ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது... ‛‛பான்மசாலா பற்றிய விபரங்கள் எனக்கு தெரியாது, சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும், பற்களை பளபளபாக்கும் என்று சொல்லி தான் இந்த விளம்பரத்தில் நடிக்க வைத்தனர். ஆனால் இதில் புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்கள் இருப்பது தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தேன். புற்றுநோயால் என் சொந்த வாழ்க்கையிலேயே பாதிப்பு ஏற்பட்டது. என் முதல் மனைவி, குழந்தை, நண்பர்கள் என பலர் இறந்துபோய் உள்ளனர்.
நான் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பெண்கள் மேம்பாடு உட்பட சமூகப் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறேன், மேலும் இந்தியா மீதும், இந்தியர்கள் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இப்படியொரு விளம்பரத்தில் தெரியாமல் நடித்துவிட்டேன், இனி இதுபோன்ற விளம்பரத்தில் நடிக்க மாட்டேன். இந்த ஒரு விளம்பரத்தால் ஹாலிவுட் ஸ்டார் என்ற இமேஜூம் சுக்குநூறாக நொறுங்கிவிட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி என் சம்பந்தப்பட்ட போட்டோக்களை நீக்க சொல்லியிருக்கிறேன். பான்மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்".
இவ்வாறு பியர்ஸ் பிராஸ்னன் கூறியுள்ளார்.