சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்த சரவணன் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பின்னர் பருத்திவீரன் படம் மூலம் குணசித்ர நடிகராக ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது பல வருடங்களுக்கு பிறகு அவர் ‛கன்னிச்சாமி' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
இதில் அவர் மேடை பாடகராக நடிக்கிறார். அவரை காதலித்து திருமணம் செய்து கொள்பவராக நடிக்கிறார் அர்ச்சனாசிங். ஒருகட்டத்தில் அர்ச்சனா சிங்கை காதலித்த வில்லன் சத்யபிரகாஷ் கணவன், மனைவி இருவருக்குள்ளும் சந்தேகத்தை விதைத்து பிரிக்கிறான். சரவணனின் மகன் கன்னிச்சாமியாக சபரிமலைக்குச் சென்று அய்யப்பன் அருளால் தாய் தந்தையை எப்படி சேர்த்து வைக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இதன் படப்பிடிப்புகள் கேரளா, சபரிமலை, எரிமேலி, ஆவுடையார் கோவில், அறந்தாங்கி பகுதியில் நடந்துள்ளது. குருசாமி, அபூர்வ மகான் படங்களை இயக்கிய கே.ஆர்.மணிமுத்து இயக்கி உள்ளார். நவ்ஷத் ஒளிப்பதிவு செய்துள்ளார், கண்மணிராஜா இசை அமைத்துள்ளார். கன்னிச்சாமியாக மாஸ்டர் யோகேஸ்வரன் நடித்துள்ளார். அடுத்த மாதம் வெளிவருகிறது.