சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ்த் திரையுலகத்தில் அப்பாவின் நடன இயக்கத்தில் குழு நடன நடிகராக அறிமுகமாகி அதன் பின் தனி நடன நடிகராக மாறி, நாயகனாக உயர்ந்து, இயக்குனராகவும் வெற்றி வாகை சூடிக் கொண்டிருப்பவர் பிரபுதேவா. இந்தியாவில் உள்ள சிறந்த நடனத் திறமைசாலிகளில் முதன்மையானபர் பிரபுதேவா என்பதற்கு மாற்றுக் கருத்தே இல்லை. ஒரு கட்டத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு இயக்கத்தில் கவனம் செலுத்தினார். தெலுங்கில் அவர் இயக்கி முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட், அப்படியே தமிழுக்கும் வந்து ஹிந்திக்கும் சென்று அங்கும் தன் திறமையை வெளிப்படுத்தினார்.
தமிழில் 12 வருடங்கள் கழித்து 'தேவி' படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார் பிரபுதேவா. இன்றைய இளம் ஹீரோக்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரது படங்களுடன் பிரபுதேவா நடித்த 'தேவி' படமும் வருகிறதே, அவர்களுடன் போட்டியில் பிரபுதேவாவும் தாக்குப் பிடிப்பாரா என்று கோலிவுட்டில் பேச்சு இருந்தது. ஆனால், அதையும் மீறி 'தேவி' படம் தனி வெற்றியைப் பெற்றுள்ளது. சில காட்சிகள் படத்தில் ஹிந்திப் படம் பார்க்கும் உணர்வை ஞாபகப்படுத்தினாலும் இதுவரை வந்த பேய்க் கதைகளில் இது ஒரு வித்தியாசமான பேய்க் கதையாக இருந்தால் ரசிகர்களை இந்தப் படம் கவர்ந்தது. மனைவி தமன்னாவின் உடலில் புகுந்த பேயுடன் ஒப்பந்தம் போட்டு கணவன் பிரபுதேவா பேயை விரட்ட என்ன செய்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. இதை நகைச்சுவை கலந்து கொடுத்ததால் வெற்றி பெற்றுவிட்டார்கள்.
12 வருடங்கள் கழித்து பிரபுதேவா நடிக்க வந்தாலும் அவருக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியை 'பேய் வெற்றி' என்றுதானே சொல்ல முடியும்.