சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஹன்சிகா, தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் ஆகியோருடன் நடிக்காமலேயே டாப் ஹீரோக்களில் விஜய்யுடன் மட்டும் நடித்து முன்னணி ஹீரோயின் எனப் பெயர் வாங்கியவர். ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தெலுங்கில் நாயகியாக அப்படியே தமிழ்ப் பக்கம் வந்தவர். அவர் நடித்து வெளிவந்த படங்களில் “ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, அரண்மனை, அரண்மனை 2” ஆகிய படங்களை மட்டுமே வெற்றிப் படங்கள் என சொல்ல முடியும். மற்றபடி அவரும் வெற்றிப் படங்களை விட தோல்விப் படங்களில்தான் அதிகம் நடித்திருக்கிறார். இருந்தாலும் கடந்த சில வருடங்களாக அவர் நடித்து வருடத்திற்கு சராசரியாக 5 படங்களாவது வெளிவந்தன.
இந்த 2016ம் ஆண்டிலும், ஹன்சிகா நடித்து “அரண்மனை 2, போக்கிரி ராஜா, உயிரே உயிரே, மனிதன்” ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. தற்போது ஹன்சிகா, ஜெயம் ரவி ஜோடியாக 'போகன்' படத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். வேறு எந்தப் பட வாய்ப்பும் அவருக்கு வரவில்லை. இதனிடையே சூர்யா ஜோடியாக மீண்டும் நடிக்கப் போகிறார் என கடந்த சில நாட்களாக ஒரு தகவல் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு ஏன் இப்போது திடீர் என இடைவெளி என அவருடைய ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இன்னும் சில இளம் ஹீரோக்களுடனும் ஹன்சிகா ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டியுள்ளது. அதற்குள் இப்படி வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை 'போகன்' படம் வந்த பிறகு ஹன்சிகாவின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பமாகவும் வாய்ப்புள்ளது.