சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நான் மாடர்ன் கேர்ள்; சேலையெல்லாம் கட்ட மாட்டேன் என்று கூறி வருகிறார் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தில் மாமனாரை மயக்கி, கள்ள உறவு கொள்ளும் கேரக்டரில் நடித்தபோதும் சரி, மைனா படத்தில் நடித்தபோதும் சரி... அமலாபாலின் அழகு வெளிச்சத்துக்கு வந்ததே தாவணி மற்றும் சேலையால்தான். அதுவும் சமீபத்தில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் முழுக்க முழுக்க கண்ணைக் கவரும் வண்ண சேலை கட்டி நடித்திருந்த அம்மணியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அப்படி இருக்கும்போது சேலை கட்டுவதில் தனக்கு இஷ்டம் இல்லை என்று கூறி மறுத்து வருகிறாராம் அம்மணி.
அமலா பால் எந்த விழாக்களுக்கு வந்தாலும் மாடர்ன் டிரஸ்ஸில் தான் வருகிறார். அழகாக இருக்கிறீர்கள், லட்சணமாக தழையத் தழைய அழகாக புடவை அணிந்து வரலாமே என்று விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டால், விழாக்களுக்கு புடவையில் வருவது கஷ்டம்; சேலை கட்ட நேரமாகும். மாடர்ன் டிரஸ் அணிவது ரொம்ப ஈஸி, என்று கூறி மறுத்துவிடுகிறாராம்.