சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரிஷ். நானே என்னுள் இல்லை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தை ஜெயசித்ரா தயாரித்து, அவரே இயக்கினார். படம் தோல்வி அடையவே நடிப்பு ஆசையை கைவிட்டு இசை அமைப்பாளர் ஆனார் அம்ரீஷ். சிறு வயதிலிருந்தே முறைப்படி இசை கற்றவர். நானே என்னுள் இல்லை படத்துக்கும் அவர்தான் இசை அமைத்திருந்தார்.
தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா, பரத் நடிக்கும் பொட்டு படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். அம்ரிஷிக்கும், அவரது உறவு பெண்ணான கீர்த்திக்கும் திருமணம் செய்ய பெரியவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். கீர்த்தி எம்.பி.ஏ பட்டதாரி. இவர்கள் திருமணம் வருகிற 19ந் தேதி எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். அன்று மாலை 6 மணிக்கு அதே மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.