மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
அய்யன், சங்கரா, மாமதுரை ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் வாசன் கார்த்திக். காமெடி நடிகர் சிங்கமுத்துவின் மகனான இவர் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. இருப்பினும், மகனை எப்படியேனும் முன்னணி நடிகராக்கியே தீருவது என்கிற முயற்சியில் இருந்த பின்வாங்காத சிங்கமுத்து, தற்போது மகனுக்காக ஒரு கமர்சியல் கதையை ரெடி பண்ணிக்கொண்டு அந்த பட வேலைகளில் இறங்கியிருக்கிறார். அப்படத்தில் கஞ்சா கருப்பு, சிங்கம்புலி உள்பட பல காமெடி யன்கள் நடிக்கிறார்கள்.
மேலும், இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் மகனுக்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையை நடிக்க வைத்தால் படத்தை விற்பனை செய்வது எளிது என்பதால், தற்போது சில முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வருகிறார் சிங்கமுத்து. ஆனால் வாசன் கார்த்திக் பிரபலமில்லாத நடிகர் என்பதால், சிங்க முத்து கால்சீட் கேட்ட அஞ்சலி, பிரியாஆனந்த், நிகிலா, ரெஜினா போன்ற பல நடிகைகள், சிக்காமல் எஸ்கேப் ஆகி விட்டார்களாம். குறிப்பாக, அவரிடம் நடிக்க விருப்பம் இல்லை என்பதை ஓப்பனாக தெரிவிக்காமல், கால்சீட் இல்லை என்று சொல்லி நழுவி விட்டார்களாம்.