நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு |
ஆக்ஷன் கிங் அர்ஜூன், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் நடித்து வரும் படம் நிபுணன். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. அருண் வைத்தியநாதன் இயக்குகிறார். இந்தப் படத்தின் கிளைமாக்சில் துப்பறியும் நிபுணரான அர்ஜுனும், அவரது டீமில் உள்ள பிரசன்னா, வரலட்சுமி ஆகியோரும் இந்தியாவில் நடைபெறும் தொடர் கொலைகளுக்கு காரணமான ஒருவனை வெளிநாட்டில் பிடிக்கிறார்கள். அவன் யார் என்பது மிகவும் அதிர்ச்சியான ஒன்று. இந்த நிகழ்ச்சி யூ டியூப், வாட்ஸ்அப்பில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இதனை பார்த்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். இது கிளைமாக்ஸ் காட்சி. இந்த காட்சியில் நீங்களும் இடம்பெறலாம். எப்படி என்பது குறித்து இயக்குனர் அருண் வைத்தியநாதன் கூறியிருப்பதாவது:
இந்த காட்சியை உங்கள் கைப்பேசியின் (ஸ்மார்ட்ஃபோன்) வாயிலாகவோ அல்லது நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா மூலமோ சற்று அதிர்ச்சியான முகபாவனையோடு உங்கள் ஊர், நாடுகளில் உள்ள ஒரு பிரபலமான லேன்ட்மார்க்கின் அருகில் உதாரணமாக சான்ஃபிரான்சிஸ்கோ என்றால் கோல்டன் கேட் பாலம் அருகில், சென்னை என்றால் மெட்ரோ ரயில், மெரினா, விமான நிலையம் இப்படி எளிதில் அடையாளம் தெரியும்படியான இடங்கள் உங்களுக்கு பின்புறம் அமையும்படி, ஹெச்.டி. (HD) ஃபார்மெட்டில் தெளிவாக காணொளி ஒன்று பதிவு செய்து எங்களுக்கு அனுப்பவும். சிறந்த வீடியோ பதிவை நாங்கள் எங்கள் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் பயன்படுத்துவோம்.
இந்த காணொளி பதிவு இந்தியாவாக இருந்தால் இரவு நேரத்தில் அமைந்ததாக இருக்கவேண்டும். இந்திய நேரத்திற்கு தகுந்தாற்போல் பிற நாடுகளின் நேரம் இருக்கவேண்டும். உதாரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளாக இருப்பின் பகலாக இருத்தல் அவசியம். வீடியோவை #IAMNIBUNAN என்ற ஹாஷ் டாக் மூலம் ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் ஷேர் செய்யுங்கள். கற்பனை குதிரையைத் தட்டி விடுங்கள். உங்களின் வீடியோவைக் காண நாங்களும் ஆர்வமாக உள்ளோம். என்கிறார் அருண் வைத்தியநாதன்.