சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ்த் திரையுலகில் 'செல்லமே' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஷால். நடிக்க வருவதற்கு முன் நடிகர் அர்ஜுனிடம் அவர் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். 'செல்லமே' படம் வித்தியாசமான காதல் படமாக அமைந்து வெற்றி பெற்றது. தொடர்ந்து விஷால் நடித்த 'திமிரு, சண்டக் கோழி' ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெற்றதால் அவரும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்தார். 'பாண்டியநாடு' படத்திற்கு பிறகு அந்த அளவிற்கான ஒரு வெற்றிக்காக கடந்த மூன்று படங்களாகக் காத்துக் கொண்டிருக்கிறார்.
விஷால் தமிழில் நாயகனாக நடித்துள்ள படங்களை அனைத்துமே தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. அவருடைய தாய் மொழி தெலுங்கு என்பதால் அங்கும் அவருடைய டப்பிங் படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே நேரடித் தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க விஷால் முயற்சி எடுத்து வந்தார். தற்போது இயக்குனர் ஷிவாஸ் இயக்க உள்ள புதிய படத்தின் மூலம் விஷால் நேரடித் தெலுங்குப் படம் ஒன்றில் அறிமுகமாக உள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீவாஸ் இதற்கு முன் பாலகிருஷ்ணா நடித்த 'டிக்டேட்டர்' படத்தை இயக்கியவர். ஸ்ரீவாஸ் - விஷால் இணைய உள்ள புதிய படத்தை தமிழ், தெலுங்கில் தயாரிக்க உள்ளார்களாம்.
தெலுங்கிலிருந்து மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் தமிழுக்கு வரும் நிலையில், தமிழிலிருந்து தெலுங்கிற்கு கார்த்திக்குப் பிறகு சூர்யா, விஷால் ஆகியோர் தயாராகி வருகிறார்கள்.