சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஜி.வி.பிரகாஷ்குமார் கடைசியாக நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து வெற்றிப்படம் கொடுத்த ஹீரோ என்ற பெயரை இழந்தார் ஜி.வி.பிரகாஷ். 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் 'கடவுள் இருக்கான் குமாரு'.
இந்தப் படம் வெற்றியடந்தால்தான் அவரது மார்க்கெட்டில் விழுந்த விரிசல் சரியாகும் இல்லை என்றால் ஜி.வி.பிரகாஷ்குமாரின் கேரியர் தள்ளாட ஆரம்பித்துவிடும். 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். ஆர்யா, ஜீவா, கார்த்தி, உதயநிதி ஆகியோரின் படங்களை இயக்கி வெற்றியடைந்தவர் இந்தப்படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷை இயக்குகிறார்.
'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் நிக்கி கல்ராணி, ஆனந்தி இருவரும் கதாநாயகியாக நடித்து வருகின்றனர். 'டார்லிங்' படத்தில நிக்கி கல்ராணியும், 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படங்களில் ஆனந்தியும் ஏற்கெனவே ஜி.வி.யுடன் நடித்தவர்கள். சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு செல்லும் பயணத்தின்போது ஏற்படும் திகில் சம்பவங்களை மையமாக வைத்து இந்தப்படத்தை ஹாரர் காமெடியாக இயக்கியுள்ளாராம் எம்.ராஜேஷ். 'கடவுள் இருக்கான் குமாரு' படம் தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.