சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படங்களின் எண்ணிக்கை ஓராண்டில் 200-ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதில் பெரிய வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் சொர்ப்பம் தான். அதிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை குறைந்தது 3 முதல் 8 படங்கள் வரை ரிலீஸாகிறது. இந்தவாரம் 7 படங்கள் ரிலீஸாகியுள்ளன. நேற்று கோகுல அஷ்டமி என்பதால் நேற்றே சில படங்கள் ரிலீஸாகிவிட்டன. சரி இனி அந்த 7 படங்கள் எது என்று பார்ப்போம்...
எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
‛49 ஓ' படத்திற்கு பிறகு கவுண்டமணி மீண்டும் ஹீரோவாக நடித்துள்ள படம் தான் ‛எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது'. கவுண்டமணி, கேரவன் அதிபராக நடித்திருக்கிறார். வழக்கம்போல் கவுண்டமணியின் நக்கல், நய்யாண்டி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இந்தப்படத்தில் இருக்கிறது.
மீண்டும் ஒரு காதல் கதை
மலையாளத்தில் வெற்றி பெற்ற தட்டத்தின் மறையத்து படத்தின் ரீ-மேக்காக வெளிவந்திருக்கும் படம் தான் ‛மீண்டும் ஒரு காதல் கதை'. யாரடி நீ மோகினி, குட்டி படங்களின் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க காதல் படமாக இப்படம் வெளியாகி உள்ளது.
பயம் ஒரு பயணம்
டாக்டர் பரத் ரெட்டி, மீனாட்சி தீட்சித் நடிப்பில் வெளியாகியுள்ள திரில்லர் படம் தான் ‛பயம் ஒரு பயணம்'. த்ரில்லர் படங்களிலேயே மிகவும் வித்தியாசமான ரியல் த்ரில்லர் படமாக இப்படம் இருப்பதாக இப்படத்தை பார்த்த பிரபல இயக்குநர்கள் சிலர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேற்சொன்ன மூன்று படங்கள் தவிர ‛வென்று வருவான்', ‛54321', ராம்கோபால் வர்மாவின் டப்பிங் படமான ‛ஜாக்கோபார்', அந்த குயில் நீதானா போன்ற படங்களும் ரிலீஸாகி உள்ளன.
இவை தவிர ஆங்கில படமான 'மெக்கானிக்-2' படமும், ஹிந்தி படமான பிளையிங் ஜாட் படமும் ரிலீஸாகி இருக்கிறது.