சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
எத்தனை விமர்சனம் வந்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாதவர் சிம்பு. சமீபத்தில் ஆபாசமான பீப் பாடலை வெளியிட்டு சிக்கிலில் சிக்கிய சிம்பு, அதன் பிறகு கூட தன்னை மாற்றிக்கொள்ளாமல் இருப்பதுதான் ஆச்சர்யம். த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற ஆபாசமான படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது அவர் புதிததாக நடித்துக் கொண்டிருக்கும் படம் - AAA. அதாவது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்பது சுருக்கம். இந்தப் படத்திற்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார் சிம்பு.
என்னை விட்டு
யாரையாச்சும் நீ
கல்யாணம்தான்
பண்ணிகிட்டா
கொன்னேபுடுவேன்...
உன்னை நான்
கொன்னேபுடுவேன்...!
அந்தப் பாடலில் வருகிற ஒரு சரணம்தான் இது. காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்யும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அண்மை உதாரணம்... சுவாதி கொலை. அந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பே இன்னும் முடியவில்லை. இந்த சூழலில் இப்படி ஒரு பாடலை ஏஏஏ படத்தில்வைத்திருக்கிறார் சிம்பு.
அட்ரா அவளை... வெட்றா அவளை என்றொரு பாடல் சில வருடங்களுக்கு முன் வெளிவந்தது. அதை பெண்கள் அமைப்பு அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. அதன் தொடர்ச்சிதான் என்னை விட்டுவிட்டு இன்னொருவனை நீ நேசித்தால் உன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிற சிம்புவின் பாடல்.