சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
திரையுலகில் டப்பிங் படங்களை வெளியிடுவதற்கென்று எந்த ஒரு வரையறையும் இல்லாமல் போய்விட்டது. 80களுக்குப் பிறகுதான் டப்பிங் படங்களின் தாக்கம் தமிழ்த் திரையுலகத்தில் மிக அதிகமாக மாறியது. சிரஞ்சீவி நடித்து தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வெளிவந்த 'கைதி' திரைப்படம் இங்கு 100 நாட்கள் ஓடிய பிறகே பலரும் டப்பிங் பட வியாபாரத்தில் இறங்கினார்கள். அடுத்து 'இது தான்டா போலீஸ், இதயத்தை திருடாதே, உதயம்' இப்படி சில படங்கள் 80களில் மாபெரும் வெற்றி பெற தமிழ்நாட்டில் டப்பிங் படங்கள், குறிப்பாக தெலுங்கு டப்பிங் படங்கள் கோலோச்ச ஆரம்பித்தன. அது படிப்படியாகக் குறைந்து கடந்த சில வருடங்களாக காணாமல் போயிருந்தது.
கடந்த ஆண்டிலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. தெலுங்கில் வெளியாகும் அதே நாளிலேயே அந்தப் படங்களை தமிழில் டப் செய்து வெளியிட்டு வரவேற்பை பெற்றார்கள். அதன் பலனாக தற்போது மீண்டும் டப்பிங் படங்கள் அதிகமாகத் தயாராகி வருகின்றன. வெங்கடேஷ், நயன்தாரா நடித்து தெலுங்கில் விரைவில் வெளியாக உள்ள 'பாபு பங்காரம்' படத்தையும் 'செல்வி' என பெயர் மாற்றி நயன்தாரா படமாக ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிட உள்ளார்கள்.
நயன்தாராவிற்கு தற்போது தமிழில் தனி மார்க்கெட் உள்ள நிலையில் 'செல்வி' மாதிரியான புதிய படங்கள் வெளிவந்தால் கூடப் பரவாயில்லை. ஆனால், நயன்தாரா தெலுங்கில் ஏழெட்டு வருடங்களுக்கு முன் நடித்து வெளிவந்த படங்கள் டப்பிங் செய்து புதிய படங்களைப் போல இன்று வெளியிடுகிறார்கள். அதில் காமெடி என்னவென்றால் இரண்டிலுமே ரவிதேஜாதான் நாயகன். ஒரு படத்தின் பெயர் 'துபாய் ராணி', இந்தப் படம் 2007ல் 'துபாய் சீனு' என்ற பெயரில் தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற படம். இதன் டப்பிங் படமான 'துபாய் ராணி' படத்தைக் கூட இங்கு டிவியில் பலமுறை ஒளிபரப்பிவிட்டார்கள். அடுத்து 'அதிரடி அர்ஜுன்' என்றொரு படம். ஆனால் விளம்பரத்தைப் பார்த்தால் 'அதிரடி அர்ஜுன், அடாவடி அழகி நயன்தாரா' என்றிருக்கிறது. இந்தப் படம் தெலுங்கில் 'ஆஞ்சநேயலு' என்ற பெயரில் 2009ல் வெளிவந்த படம்.
நயன்தாரா, ஜீவா நடித்துள்ள தமிழ்ப் படமான 'திருநாள்' அடுத்த வாரம் வரும் நிலையில் இப்படி நயன்தாராவின் பழைய டப்பிங் படங்கள் அதிரடியாக வெளியாவது ரசிகர்களிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி.