சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாய்ஸ் படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக குண்டு பையனாக டிரம்ஸ் வாசித்தபடி நடித்தவர் தமன். அதன்பின்னர் இசையமைப்பாளராக மாறிய தமன், தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதிலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது தமன், சாய் தரண் தேஜ் நடிக்கும் ‛திக்கா' என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் இடம்பெறும் ‛பேபி திக்கா...' என்ற பாடலை நடிகர் தனுஷை வைத்து பாட வைத்தார். இப்பாடல் சிறப்பாக வந்துள்ளதாக தமன் கூறியிருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் மற்றொரு பாடலான ஹோட் ஷோ தேரோ... பாடலை நடிகர் சிம்புவை வைத்து பாட வைத்திருக்கிறார் தமன்.
தெலுங்கு படம் ஒன்றில் தனுஷ், சிம்பு இருவரும் பாடியிருப்பது அந்தப்படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது. இதை வைத்தே படத்தின் பாடல்களை புரொமோஷன் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.