சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்த படம் களவாணி. அந்த படத்தில் விமலின் தங்கையாக நடித்தவர் மனீஷா. அப்போது சிறிய பெண்ணாக இருந்த மனீஷா, இப்போது கதாநாயகிக்கான வயதும், உடலமைப்பும் கொண்டவராகி விட்டார். அதையடுத்து, நாயகி வாய்ப்புகளுக்காக அவர் முயற்சி எடுத்து வந்த நிலையில், தற்போது சற்குணத்தின் உதவியாளர் ஒருவர் இயக்கும் கபே -என்ற படத்தில் நாயகியாக கமிட்டாகியிருக்கிறார் மனீஷா.
அதுபற்றி அவர் கூறுகையில், களவாணி படத்தில் தங்கை வேடத்தில் நடித்த போதும் எனது நடிப்பு இயல்பாக இருந்தாக பலரும் என்னை பாராட்டினர். ஆனால் அதையடுத்து படிப்பை தொடர வேண்டியிருந்ததால் நடிப்பை தள்ளி வைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தேன். இப்போதும் கல்லூரியில் படித்துதான் வருகிறேன். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதுதான் எனது லட்சியமே. இருப்பினும், மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டிருக்கிறது.
அதனால், கபே படத்தில் கமிட்டாகியிருக்கிறேன். இந்த படத்தில் அழுத்தமான நாயகி வேடம். விருதுக்கான படம் என்று சொன்னார்கள். அதனால் நல்லதொரு ஓப்பனிங்காக இருக்கும் என்று கபே படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறேன் என்று கூறும் மனீஷா, கதைக்கேற்ப ஓரளவு கிளாமராக நடிக்கவும் தயாராக இருப்பதாக சொல்கிறார்.