கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
காலத்தாலும் எண்ண ஓட்டத்தாலும் உலகமெல்லாம் இருக்கும் தமிழர் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்து இருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
தஞ்சை மாவட்டம், சூரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சின்னையா மன்றாயர், தொழில் நிமித்தம் காரணமாக, விழுப்புரத்தில் குடியேறியுள்ளார். அங்கு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால், 1927 அக்., 1ல், ஆங்கிலேய நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது; அதே நாளில் தான், அவருக்கு நான்காவது மகனாக பிறந்தார், கணேசன்.
நாடக ஆசை காரணமாக, யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின், பால கான சபாவில் சேர்ந்துள்ளார்; அப்போது அவருக்கு, 10 வயது! சிவாஜி கண்ட, இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில், சிவாஜியாக நடித்தார்; அவரின் நடிப்புத் திறனை மெச்சிய, ஈ.வெ.ரா., அவரை, சிவாஜி கணேசன் என, அழைத்தார்;
பராசக்தி திரைப்படத்தில் சக்சஸ் என்ற முதல் வசனத்தைப் பேசி நடிப்பில் பிரபலமானார். பராசக்தி முதல் பூப்பறிக்க வருகிறோம் என 288 படங்கள் வரை நடித்துள்ளார். இதில் 100 க்கும் மேற்பட்டவை வெள்ளி விழா படங்கள். நடிக்கும் போது அந்த படத்தின் கதாபாத்திரமாகவே மாறிவிடுவது இவரது சிறப்பு. 1959 ல் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற திரைப்படத்தை இதற்கு உதாரணமாக சொல்லலாம். 200 நாட்களுக்கு மேல் இப்படம் ஓடியதால், 1962 ல் உலகத் திரைப்பட விழாவிற்கு எகிப்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற சிறப்பு பெற்றது.
எல்லோரிடமும் அன்பாகவும், நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். நவரச திலகமாக ஒன்பது வேடங்களில் நடித்த நவராத்திரி, அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் பாசமலர், செக்கிழுத்த செம்மலாக நடித்த கப்பலோட்டிய தமிழன், புரட்சி வீரனாக நடித்த சிவந்தமண் போன்ற எண்ணற்ற படங்கள் சிவாஜி கணேசனின் பெருமையை எடுத்துக் கூறும்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறந்த தினம் இன்று. காலத்தால் மறக்க முடியாத அந்த மாபெரும் நடிகர் மண்ணை விட்டுமறைந்தாலும், மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம்பெற்றிருப்பார்.
நடிகர் சங்கம் அஞ்சலி : சிவாஜியின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு நடிகர் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன், சங்க உறுப்பினர் அஜய்ரத்னம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.