சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி வருகிற 22ந் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது. படத்தை வரவேற்க அவரது ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். தியேட்டர்களை அலங்கரித்தல், தோரணம் கட்டுதல், உயரமான கட்அவுட் அமைத்தல் என்று களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்கள். ரசிகர் மன்றங்கள் மூலம் சிறப்பு காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இனிப்பு, பரிசு பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
பொதுமக்கள் முதல் நாள் முதல் ஷோ பார்க்க என்ன விலைகொடுத்தாவது டிக்கெட் வாங்க அலைமோதுகிறார்கள். இதுவெல்லாம் வழக்கமான ஒன்றுதான். ஆனால் இதுவரை சினிமா சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு பல தனியார் நிறுவனங்கள் கபாலி படம் ரிலீசாகும் 22ந் தேதியை விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. பல ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்கள் பல்க்காக டிக்கெட் புக் பண்ணி படம் பார்க்க தயாராகிவருவதால் ஊழியர்கள் இன்றி அலுவலகம் செயல்படாமல் இருப்பதை விட விடுமுறையே மேல் என்ற கருதிய நிறுவனங்கள் விடுமுறையை அறிவித்து ஜாலியாக கபாலியை கொண்டாடிவிட்டு வாருங்கள் என்று வாழ்த்தியிருக்கிறது. இதற்கான அறிவிப்புகளை அலுவல நோட்டீஸ் போர்டுகளில் வெளியிட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது பெங்களூரு, கோவையிலும் சில ஐ.டி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளது. கபாலிக்கு விடப்படும் விடுமுறையை சனிக்கிழமை பணிக்கு வந்த நேர் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளன.